சமையலுக்கும், சேமிப்புக்கும் 12 டிப்ஸ்…! பகுதி-1

சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம்.

சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர்.

கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ராகவன் நமக்குக் கொடுத்த சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் காணலாம்.

மிகச் சிறந்த தயிருக்கு…

பாலை மிதமாகச் சுட வையுங்கள். அதில், சிறிது சர்க்கரை சேர்த்து உறை ஊற்றலாம். இதனால் உறுதியான, நல்ல சுவையான தயிர் கிடைக்கும்.

கமகம கேசரிக்கு…

நீரின் அளவைக் குறைத்து பாலை சேர்த்து கேசரி செய்ய வேண்டும். இதனால், நல்ல நிறமும் மணமும் கிடைக்கும். இதனுள், அன்னாசிப் பழம் அல்லது பேரீச்சம் பழத்துண்டுகளைச் சேர்த்தால் டேஸ்ட் அப்படி இருக்கும்…

அருமையான அடைக்கு…

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து, பருபருவென வரும் அளவுக்கு மட்டும் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கலவையில் செய்யப்படும் அடை சுவையாக இருக்கும்.

ருசியான பொரியல்…

வறுத்த வேர்க்கடலை மற்றும் கசகசாவைப் பொடியாகி, வெண்டைக்காய் பொரியலில் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவை கூடும்.

வாடிப்போனால் வாடாதீர்கள்…

புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்டவை வாடிவிட்டால் நீங்களும், வாடிவிட வேண்டாம். அதனை எடுத்து காம்புகளை நீக்கிவிட்டு, வெறும் கடாயில் இரண்டு நிமிடம் வறுத்தெடுத்து பொடி செய்துகொள்ளுங்கள். இந்த பொடியை பொரியல், ரசம், குழம்பு போன்ற உணவுகளில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.

தக்காளி கெடாது…

தக்காளியை நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், கடைசி நேரத்தில் அவற்றை, நீரில் போடுங்கள். அதில் சிறிது உப்பு சேர்த்துவிட்டால் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போவதில்லை.

அடுத்த 6 டிப்ஸ்களைப் படிக்க 👇

இந்த குட்டி குட்டி டிப்ஸ்களை உங்கள் வீடுகளில் முயன்று பாருங்கள்… உங்களிடம் இதுபோன்ற டிப்ஸ் இருந்தால் எங்களிடம் கூறுங்கள்…

Recent News

Advertisment

Latest Articles