ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டி மார்ச் மாதம் தொடங்குகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த தொடரில், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா என மொத்தம் 10 அணிகள் உள்ளன.
இந்தியா மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்த 10 அணிகளில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை அணி 5 முறையும், மும்பை அணி 5 முறையும், குஜராத், ராஜஸ்தான், கே.கே.ஆர் மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்தாண்டு கே.கே.ஆர் (கொல்கத்தா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனிடையே இந்தாண்டு ஐ.பி.எல் #IPL2025 போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் மாதம் 22ம் தேதி ஐ.பி.எல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவும், பெங்களூர் அணியும் மோதுகின்றன.
மார்ச் 23ம் தேதி சென்னை அணியும், மும்பை அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கான போட்டிகளை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
