தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சிறப்பைப் பெற்றுள்ள நமது கோவை மாவட்டம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.

வேளாண்மை, ஜவுளி ஆகிய தொழில்கள் கோவையின் பிரதான தொழில்களாக இருந்து வரும் நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பெரு நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் என தொழில் துறையில் கோவை படு வேகமாக முன்னேறி வருகிறது.

தொழிலில் மட்டும் தானா? என்றால், அதையும் கடந்து கல்வி மற்றும் மருத்துவத்துறையிலும் கோவையின் வளர்ச்சி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.

கோவையின் பெருமைகளை வரும் செய்திகளில் பார்ப்பதற்கு முன்னதாக, இப்போது கோவையின் பிரத்தியேக புகைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்…





