கோவை: கடந்த 9 வாரங்களாக நடைபெற்று வந்த Happy street Coimbatore நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.
கோவையில் கடந்த 9 வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ர்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நான்கு வாரங்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. இதனிடையே ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெறும் இடம் கொடிசியா மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
Video
இந்த இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வரவில்லை என்றாலும், இளைஞர்கள் சிலர் கலந்து கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் இன்று கொடிசியா மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

Happy street Coimbatore
பாரம்பரிய கலைகளில் வள்ளிக்கும்மி ஆட்டம், கரகம் போன்றவை இடம்பெற்றன. மேலும், முக ஓவியம், பரமபதம், பம்பரம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இளைஞர்கள் பலரும் டயர் ஓட்டி மகிழ்ந்தனர்.

இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி, இன்றுடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள், “இந்த நிகழ்ச்சி நிறைவடைவது வருத்தமாக உள்ளது” என்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.