வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களே கவனம்… அடிவாரத்தில் யானை… வீடியோ காட்சிகள்!

கோவை: வெள்ளிங்கிரி மலை அன்னதானக் கூடத்தில் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், வெள்ளியங்கிரி மலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரும் நிலையில், அவ்வப்போது வெள்ளியங்கிரி மலை அடிவார கோயிலுக்கு யானைகள் வருகின்றன.

அன்னதானக் கூடத்திற்குள் புகுந்து உணவுப்பண்டங்களை எடுத்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே சம்பவத்தன்று வெள்ளியங்கிரி அடிவாரத்தில் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்ரோஷம்

அன்னதானக் கூடத்திற்குள் புகுந்த யானையை, பக்தர்களும், வனத்துறையினரும் விரட்ட முற்பட்டனர். மிரண்டு போய் கூடத்திலிருந்து வெளியேறிய யானை, வனப்பகுதிக்குள் ஓட முயன்றது.

அப்போது வனத்துறையினர் ஜீப்பில் யானையை விரட்டச் சென்றனர். ஆக்ரோஷமான யானை வனத்துறையினரின் ஜீப்பை முட்டிவிட்டுச் சென்றது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

யானை வீடியோ காட்சிகளை இங்கு காணலாம்

Recent News

Advertisment

Latest Articles