கோவை: கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை திறந்து வைக்கிறார்.
சித்தாபுதூரில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில், சிறிய கட்டடம் என்பதால் இந்த அலுவலகத்தை மாற்ற அக்கட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, பீளமேடு எல்லைத்தோட்டத்தில் புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்துள்ளன..
கோவை வருகிறார்
இந்த அலுவலகத்தை வரும் 26ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். இதற்காக தனி விமானத்தில் இன்று மாலை கோவை வருகிறார் அமித்ஷா.
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தயாராகி வருகின்றனர்.
நாளை காலை பா.ஜ.கவின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கும் அமித்ஷா, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இது அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அமித்ஷா