அடேங்கப்பா விலை உயர்வு… உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை!

கோவை: தங்கம் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.

தங்கம் மீதான இறக்குமதி வரி கடந்தாண்டு குறைக்கப்பட்டதும், தங்கம் அதிரடியான விலை குறைவைச் சந்தித்தது. இந்த விலை குறைவு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்தாண்டின் தொடக்கத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150க்கு விற்பனையான நிலையில், தற்போது 8,000ஐ கடந்து விற்பனையாகிறது.

மார்ச் மாதம் 1ம் தேதி தங்கம் கிராம் ரூ.7,940க்கு விற்பனையானது. கடந்த 10ம் தேதி கிராம் ரூ.8,050க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே கோவையில் இன்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து. புதிய உச்சமாக தற்போது ஒரு கிராம் ரூ.8,120க்கும், ஒரு பவுன் ரூ.64,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,680க்கும், ஒரு பவுன் ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent News

Advertisment

Latest Articles