தமிழ்நாடு பட்ஜெட் 2025 : மிக அதிவேக ரயில்… அறிவியல் மையம்… மெட்ரோ… கோவைக்கான அறிவிப்புகள் இதோ…!

கோவை: தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

அடுத்தாண்டுடன் தி.மு.க அரசு தனது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்த நிலையில், நடப்பு ஆட்சிக்காலத்தில் தி.மு.க அரசு தனது கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதனால், இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் தங்கம் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கோவைக்கென அறிவிக்கப்பட்டுள்ள பிரத்தியேக திட்டங்கள் பின்வருமாறு:-

கோவையில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், மேம்பட்ட பம்ப் மற்றும் மோட்டார் தொழில் நுட்பத்திற்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் தொழில் பூங்காக்களும் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும், முதியோர் நலனுக்காக கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் தூத்துக்குடி, ஈரோடு, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 25 அன்பு சோலை மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அவினாசி மற்றும் சத்தி சாலை வழித்தடங்களில் ரூ.10,740 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெற அனுப்பப்பட்டுள்ளது.

பேரூரில் புதிய ஐ.டி.ஐ அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் மாணவர்களுக்கு 6 தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்படி தமிழகத்தில் 2030க்குள் கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம். நடப்பு ஆண்டில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் மாணவர் விடுதிகள் அமைக்க ரூ.275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திற்கு ரூ.3,600 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என்றும், ரயில் போக்குவரத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழிவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள நதிகள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்பட்டு, அங்கு ஸ்பாஞ்ச் பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. நீர், மேலாண்மை மற்றும் வெள்ளத் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் மிக அதிவேகத்தில் இயங்கும் ரயில்வே அமைப்பை உருவாக்க ஆய்வு நடத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று வழித்தடங்களில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது. அதில் நமது கோவை மாவட்டமும் ஒன்று.

இத்திட்டத்தின் படி, மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கும் மிக அதிவேக ரயில் அமைப்பை கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் என்ற மேற்குமண்டல வழித்தடத்தில், 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்த ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நீங்கள் தரும் மதிப்பீடு என்ன சர்வேயில் தெரிவிக்கலாம்.

Recent News

Advertisment

Latest Articles