கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை மீதான இறக்குமதி வரி கடந்தாண்டு குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை அதிரடியாக சரிவைச் சந்தித்தது. வெள்ளி விலையும் வீழ்ச்சியடைந்தது.
மிகக்குறுகிய காலமே விலை சரிவு நீடித்தது. அதன்பின், தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கத் தொடங்கியது.
ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150க்கு விற்பனையானது. ஒன்றரை மாத காலகட்டத்தில் தங்கம் விலை கிராமுக்கு சுமார் ரூ.1,000 அதிகரித்துள்ளது.
கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது. புதிய உச்சமாக தற்போது ஒரு கிராம் ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.64,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 520 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.