இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான மல்டிவெர்ஸ் மன்மதன் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மலையாள திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. தனது இயற்கையான நடிப்பும், சரியான கதை தேர்வும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களும் நிவின் பாலியை தமிழகத்திலும் அறிமுகப்படுத்தியது.
மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் மூலமாகவே நிவின் பாலி தமிழக மக்களுக்கு பரிட்சியமானார். ஏற்கனவே அவர் பல படங்கள் நடித்திருந்தாலும், கேரளா செல்லும் தமிழக ஆசிரியர் மீது காதல் வயப்படும் கல்லூரி மாணவராக அனைவருக்கும் பிடித்துப் போனார் நிவின் பாலி.
தமிழில் இவர் நடித்து நேரம், ரிச்சி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனிடையே இந்த முறை நிவின்பாலி சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் படம் நடித்து வருகிறார்.

இந்தியாவில் முதன் முறையாக தயாராகும் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்து வருகிறார். மல்டிவெர்ஸ் மன்மதன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
படத்தின் வெளியீடு, எந்தெந்த மொழிகளில் வெளியாகிறது? டீசர் வெளியீடு எப்போது என்ற விவரங்கள் இல்லாமல், டைட்டில் மட்டுமே இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.