உடலில் காயம்… காலில் முறிவு; கோவையில் பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு! – வீடியோ

கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடிய கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில், அந்த சிறுத்தை உயிரிழந்தது.

வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, 4 ஆடுகளை வேட்டையாடிக் கொன்றது. இது தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது.

அந்த கட்சிகள் வெளியான மறு நாளே சிறுத்தை மீண்டும் தோட்டத்திற்குள் வந்து ஆடுகளைத் தேடும் காட்சியும் வெளியானது. இது வடவள்ளி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

அதேபோல், பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் சிறுத்தை தென்பட்டது. இதனால், பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வனத் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு பூச்சியூரை அடுத்த கலிங்கநாயக்கன் பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அப்பகுதிக்குச் சென்றனர்.

அங்கு பொதுமக்கள் உதவியுடன் சிறுத்தையைப் பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தையை அடர் வனத்திற்குள் விட முடிவு செய்தனர்.

இதனிடையே அந்த சிறுத்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தைக்கு உடலில் காயங்கள் இருந்ததாகவும், காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வனத்துறை, வேறு விலங்குடன் சண்டை இட்டதால் சிறுத்தை பலியாகி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

Recent News

Advertisment

Latest Articles