புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் காவலர் மாற்ற விழா இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிகழ்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு இந்த காவலர் மாற்ற விழா நிகழ்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த புகைப்படங்களை இங்கு காணலாம்.

புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பின் அடிப்படையில், குடியரசுத் தலைவரின்
பாதுகாப்புப் படையினர், பாரம்பரிய ராணுவ காவலர் பட்டாலியன், மற்றும் இசைக்குழு ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றன. இதில் குதிரை வீரர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் புதிய வடிவமைப்பில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நேரில் காண விரும்பும் பொதுமக்கள் https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து தங்களுக்கான இடங்களை உறுதிப்படுத்தலாம் என்று பி.ஐ.பி அறிவித்துள்ளது.


