கோவை: நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அங்கேயே தங்கி பயிற்சி மேற்கொள்வர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், இன்று காலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விளையாட்டு அரங்கத்திற்கான சமையற் கூடத்தில் ஆய்வு செய்த ஆட்சியர், சமையலர்கள் மற்றும் அலுவலர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
மேலும், மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளையும் அவர்கள் பெற்ற சான்றிதழ்களை பார்த்து பாராட்டினார்.
