கோவை தொழில்முனைவோர் தங்கள் தொழிலை விரிவுபடுத்த 24 மணி நேரத்தில் ஒப்புதல்!

கோவை: கோவை தொழில்முனைவோர் தங்கள் நாட்டில் தொழில் தொடங்கலாம் என்று அழைப்புவிடுத்துள்ளது மொரிஷியஸ் தீவு.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்தியா-மொரிஷியஸ் சம்மிட்-2025 என்ற பெயரில் வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது.

மொரிஷியஸ் நாட்டின் தூதரான முகேஸ்வர் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும், கல்வி நிறுவனங்களின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் மொரிஷியஸ் தூதர் முகேஸ்வர் பேசியதாவது:-

மொரிசியஸ் ஒரு சிறிய தீவு. ஆனாலும், இது ஜாதி, மத, பேதங்கள் இல்லாத அமைதியான நாடு. கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும், கல்வி மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்களும் தங்கள் நிறுவனங்களின் கிளைகளை மொரிஷியஸ் நாட்டில் தொடங்க அழைப்பு விடுக்கிறேன்.

எங்கள் நாட்டில் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யபடுகிறது. உலகில் முக்கிய 150 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் புரிந்து வருகிறோம்.

எங்கள் நாட்டில் நவீன ஜவுளி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெரிதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அரசியல் குழப்பங்கள் எதுவும் இல்லாத எங்கள் நாட்டில் தொழில் தொடங்க விருப்பமுள்ள தொழில் முனைவோய்ருக்கு, விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும்.

இந்தியர்கள் மொரீசியஸ் செல்ல விசா தேவையில்லை. தொழில் மற்றும் வர்த்தகத்தில் கோவை முக்கிய நகரமாக உள்ளது. இங்குள்ள தொழில்முனைவோர், எங்கள் நாட்டில் நம்பிக்கையாக தொழில் தொடங்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Recent News

Advertisment

Latest Articles