கோவை கோனியம்மன் தேரோட்டம்; நகரில் 24 பள்ளிகளுக்கு ‘லீவ்’!

Koniamman car festival 2025: கோவை கோனியம்மன் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, கோவையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை நாளை நடைபெற உள்ளது.

இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, மாநகரில் உள்ள 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோனியம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, கோவை பகுதிகளில் உள்ள 24 பள்ளிகளுக்கு மார்ச் 5 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

ஆனால், நாளை 11 – ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

இன்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • CCMA மகளிர் மேல் நிலைப் பள்ளி (ராஜ வீதி)
  • வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி (ராஜ வீதி)
  • புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி (ராஜ வீதி),
  • சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • புனித பிரான்சிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி
  • புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • புனித மேரீஸ் மேல்நிலைப் பள்ளி
  • புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி
  • மில்டன் மெட்ரிக் பள்ளி
  • ஸ்ருஷ்டி வித்யாலயா
  • வாசவி வித்யாலயா
  • மதர்லாண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • T.E.LC நடுநிலைப் பள்ளி
  • ICC நடு நிலைப் பள்ளி
  • நல்லாயன் தொடக்கப் பள்ளி
  • மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி
  • ஒப்பணக்கார வீதி
  • ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி
  • மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
  • கோவை நகரம் VH ரோடு
  • CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • மன்பவுல் உலூம் தொடக்கப் பள்ளி
  • மன்பவுல் உலூம் மேல்நிலைப் பள்ளி
  • பிரசண்டேஷன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி
  • மாரன்ன கவுண்டர் உயர்நிலைப் பள்ளி

ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை மற்ற பெற்றோர்களுக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News

Advertisment

Latest Articles