கோவை வானிலை முன்னறிவிப்பு: நாளையும் மழை… கூடவே ஒரு நாள் Free…!

கோவை: இந்த வாரத்திற்கான கோவை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவையில் மார்ச் 11,12ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த செய்தியை நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் கடந்த வாரமே வெளியிட்டது.

ஆனால், வானிலை மையம் கூறியதைக் காட்டிலும், கோவையில் தற்போது அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் கோவையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும் தலா 34, 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்.

மார்ச் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை குறைந்தது 23 அல்லது 24 டிகிரி செல்சியசில் இருந்து, அதிகபட்சம் 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். இந்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

மார்ச் 17ம் தேதி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நாளில் குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மக்கள் இந்த முன்னறிவிப்புக்கு ஏற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Recent News

Advertisment

Latest Articles