கோவை: கோவையில் நேற்று பெய்த மழையில் அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் கோவையில் பழைய சீதோசன நிலை திரும்பி உள்ளது.
இதனிடைய கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி:
கோவை விமான நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் 29.90 மில்லி மீட்டர் மழையும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 22 மில்லி மீட்டர் மழையும், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் 6.30 மில்லி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 19 மில்லி மீட்டர் மழையும், பில்லூர் அணைப்பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், அன்னூரில் 2.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது
கோவை தெற்கு தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் 19 மில்லி மீட்டர் மழையும், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 30.30 மில்லி மீட்டர் மழையும், வாரப்பட்டி சுற்று வட்டாரத்தில் 6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 14 மில்லி மீட்டர் மழையும், சிறுவாணி அடிவாரத்தில் 6 மில்லி மீட்டர் மழையும், மதுக்கரை தாலுக்காவில் 8 மில்லி மீட்டர் மழையும், போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17.80 மில்லி மீட்டர் மழையும், கிணத்துக்கடவு தாலுகா, ஆனைமலை தாலுகா மற்றும் ஆழியாறில் தலா ஒரு மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கோவையில் மொத்தமாக நேற்று ஒரே நாளில் 195.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று சூலூரில் அதிகபட்சமாக 30.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.