வடமாநிலங்களில் அடுத்தடுத்து (DelhiNCR, Odissa, Bihar) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 5.36 மணியளவில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வழக்கமான அதிர்வு போல் இல்லாமல், இந்த முறை ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி தாழ்வான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

டெல்லியைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து காலை 8.55 மணிக்கு ஒடிசாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பீகார், ஒடிசாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவாகியிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நொய்டா, குர்கானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நில அதிர்வு சம்பவங்களைச் சந்தித்து வந்த வட மாநில மக்கள், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் பீதி அடைந்துள்ளனர்.