Gold rate in Coimbatore : தங்கம் விலை இன்று மீண்டும் விலை உயர்வைச் சந்தித்து, தற்போது ஒரு பவுன் ரூ.64,000ஐக் கடந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து விலை ஏறி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் நாள் ஒரு கிராம் தங்கம் (22 காரட்) ரூ.7,150க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.57,200க்கும் விற்பனையாகி வந்தது.
இதனிடையே இரண்டு மாத கால இடைவெளியில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்த்துள்ளது
. ஏற்கனவே தங்கம் விலை பவுனுக்கு ரூ.64,000ஐ கடந்து மீண்டும் விலை குறைவைச்
சந்தித்த நிலையில், இன்று பவுன் ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 480 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.52,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.