Gud Bad Ugly ரிலீஸ் தேதி, படக்காட்சி வீடியோவுடன் அறிவிப்பு: GBU Release date

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள Gud Bad Ugly திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வீடியோ வெளியிட்டு அறிவித்ததுள்ளது படக்குழு.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம் Gud Bad Ugly. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு வைரலானது.

மார்க் ஆண்டனி, திரிசா இல்லைன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஆத்விக் ரவிச்சந்திரன், அஜித்துடன் கை கோர்த்து, படு டிரண்டியாக பர்ஸ்ட் லுக் வெளியிட்டனர்.

மேலும், தீனா பட லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 7.03க்கு வெளியாகும் என்று இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரவு 8.02க்கு படத்தின் அறிவிப்பு வெளியானது.

அஜித்தே இல்லை…

படக்காட்சி வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு, அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் திரிசா நடிக்க உள்ளதாக, அவரை மட்டும் காட்டியுள்ளனர்.

மேலும், படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில், திரிசாவைத்தவிற மற்ற கதாபாத்திரங்கள் யாரும் காட்டப்படவில்லை.

படத்தின் ஸ்டைலில், ஏப்ரலில் ரிலீஸ் மாமே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ
இதையும் பார்க்கலாமே…

Recent News

Advertisment

Latest Articles