அன்பான வாசகர்களுக்கு வணக்கம்…

எங்களை தொடர்ந்து இயங்கச் செய்துகொண்டிருக்கும் அன்பான வாசகர்களுக்கு வணக்கமும், நன்றியும்…

ஜாதி, மதம், அரசியல் என எந்த சார்புகளும், செய்தியில் எவ்வித சமரசமும் இன்றி இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது நமது நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம்.

இன்று வரை, கொள்கையில் முரணின்றி பயணித்து வருகிறோம். வாசகர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களுக்கான வழிகாட்டியாக இருந்து வந்துள்ளன.

தவறு நடைபெறும் போது, அதிகாரத்தை விமர்சிக்கவும், நல்லதைச் செய்யும் போது உள்ளபடியே பாராட்டவும், நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் தனது ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

6 ஆண்டுகளாக, சார்பின்றி செயல்படும் நமது தளம் சில நேரங்களில் எதிர்ப்பையும், சவால்களையும் சந்திக்க வைத்திருக்கிறது. தடைகளால் தனது இலக்கை இழக்காமல் இன்றும் பயணிக்கிறது.

அதன் பயனால் விளைந்த வளர்ச்சியின் காரணமாக, இன்று நமது நியூஸ் க்ளவுட்ஸ் தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை அறிமுகம் செய்கிறது.

newsclouds.in என்ற பெயரில் செயல்பட்டு வரும் நமது தளம், இனி newscloudscoimbatore.com என்ற பெயரில் செயல்பட உள்ளது என்பதையும், புதிய தளத்தில் வாசகர்களின் வசதிக்காக புதிய அம்சங்களையும் இணைத்துள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செய்திகள், இணையதளப் பக்கத்தை பரிசோதிக்க பதிவிடப்பட்டவை. இந்த அறிமுக/நன்றி உரையை நமது புதிய தளத்தின் முதல் செய்தியாக அறிவிக்கிறோம்.

News Clouds Coimbatore Logo

என்ன புதிய அம்சங்கள்?

Home – தளத்தில் பதிவாகும் அனைத்து சமீபத்திய செய்திகள் ஒரே இடத்தில். YouTube வீடியோக்களையும் நேரடியாக காணும் வசதி.

Coimbatore – கோவை மண்ணில் நிகழும் அனைத்து முக்கிய செய்திகள் இங்கு பதிவாகும்.

Weather – கோவையின் ஒரு வார வானிலை முன்னறிவிப்பை இந்த பகுதியில் காணலாம். வெப்ப அளவு, மழை அறிவிப்பு உள்ளிட்டவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Global – கோவையைத் தவிர்த்து, உலகளாவிய முக்கிய நிகழ்வுகள் இங்கு இடம்பெறும்.

Cinema – சினிமா கிசுகிசு, புகைப்படங்கள், புதிய வெளியீடுகள், விமர்சனங்கள் போன்றவை இங்கு இடம் பெறும்.

Lifestyle – வாழ்வியல் முறை, உடல்நலம், ஆன்மிகம், உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட தலைப்புகளில் தரமான செய்திகள்.

Media – புதிய புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.

மேலும், Flash News அம்சம் மூலம் கடைசியாக வெளியான 5 முக்கிய செய்திகள் தளத்தின் மேற்பக்கம் நகர்ந்து கொண்டே இருக்கும்.

நாம் நமது சமூக ஊடகப்பக்கங்களில் பகிரப்படும் வீடியோக்களை இனி நமது செய்தித்தளத்திற்குள்ளேயே காண முடியும்.

இவற்றுடன் புதுப்பிக்கப்பட்ட செய்திக்குழு.

இது வெறும் ஒரு மாற்றம் அல்ல… ஒரு புதிய தொடக்கம்.

வாசகர்களுக்காக, வாசகர்களுடன் நமது பயணம், அறம் சார்ந்தே தொடரும் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.

புதிய தளத்தில் உள்ள பிரிவுகள், அம்சங்களை வாசகர்கள் பார்வையிட கேட்டுக்கொள்கிறோம். இத்தளம் குறித்த தங்களது மேலான ஆலோசனைகள், கருத்துக்கள், தள மேம்பாடு குறித்த கருத்துக்களை எங்களுடன் பகிரலாம் வாசக பெருமக்களே. News Clouds Coimbatore WhatsAppல் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்,
செய்திக்குழு,
News Clouds Coimbatore

NCC

Recent News

Advertisment

Latest Articles