ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், சென்னை அணிக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி நடைபெறும் தேதி, எதிரணி மற்றும் போட்டி நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு.
- மார்ச் 23: சென்னை-மும்பை – சென்னையில் போட்டி நடைபெறுகிறது
- மார்ச் 28: சென்னை-பெங்களூரு – சென்னையில் போட்டி
- மார்ச் 30: சென்னை-ராஜஸ்தான் – கவுகாத்தியில் போட்டி
- ஏப்ரல் 5: சென்னை-டில்லி – சென்னையில் போட்டி
- ஏப்ரல் 8: சென்னை-பஞ்சாப் – முல்லன்பூரில் போட்டி
- ஏப்ரல் 11: சென்னை-கொல்கத்தா- சென்னையில் போட்டி
- ஏப்ரல் 14: சென்னை-லக்னோ- லக்னோவில் போட்டி
- ஏப்ரல் 20: சென்னை-மும்பை – மும்பையில் போட்டி
- ஏப்ரல் 25: சென்னை-ஹைதராபாத் – சென்னையில் போட்டி
- ஏப்ரல் 30: சென்னை-பஞ்சாப் – சென்னையில் போட்டி
- மே 3: சென்னை-பெங்களூரு – பெங்களூருவில் போட்டி
- மே 7: சென்னை-கொல்கத்தா – கொல்கத்தாவில் போட்டி
- மே 12 – சென்னை-ராஜஸ்தான்- சென்னையில் போட்டி
- மே 18: சென்னை-குஜராத்-அகமதாபாத்தில் போட்டி