மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் பைசன் ( Bison Movie Update ) திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் பைசன்’ (Bison) என்ற ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்ட் படத்தை இயக்கி வருகிறார். இது மாரி செல்வராஜின் 5வது படமாகும்.
பைசனின் கதை
பைசன் படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். துருவுக்கு இது மூன்றாவது படம்.
கபடியை விளையாட்டை மையப்படுத்தி பைசனின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்ணன் திரைப்படத்தில் தனுஷ், கபடி விளையாடும் போது பிரச்சனை உருவாவதை மாரி செல்வராஜ் பதிவு செய்திருப்பார். எனவே பைசன் படமும், கர்ணன் திரைப்பட களத்தை ஒட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. இன்றுடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில் படத்தை வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையின் போது வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், தியேட்டர் ரிலீசுக்குப் பிறகு Netflix தளத்தில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
பைசன் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார், எழில் அரசு கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். கோடை வெப்பத்தில் பைசன் தாக்குப்பிடிக்குமா? எகிறி அடிக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.