கோவையில் ஹோலி கொண்டாட்டம்; வட மாநில மக்கள் உற்சாகம்! – PHOTOS

கோவை: கோவையில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் வடமாநில மக்கள் கலந்து கொண்டனர்.

ஹோலி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வடமாநில மக்கள் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாடும் இப்பண்டிகை ஆண்டுதோறும் கோவையிலும் விமர்சையாக வடமாநில மக்களால் கொண்டாடப்படுகிறது.

கோவை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் வடமாநில ஊழியர்கள் வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டு உற்சாகமாக ஹோலி கொண்டாடினார்கள்

கோவை ரயில்வே பணிமனையில் மெக்கானிக் எலக்ட்ரிக்கல் டிவிஷனில் பணி புரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஸ்டேஷன் மேலாளர் சஞ்ஜீவ் குமார், ரயில் நிலைய கோச்சிங் டிப்போ அதிகாரி அனுஜ் ரத்தோர்,மெக்கானிக் பணிமனை அதிகாரி சிவராஜ்
மற்றும் ரயில்வே பணிமனை ஊழியர்கள் இணைந்து ஹோலி கொண்டாடியது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Recent News

Advertisment

Latest Articles