மும்மொழிக் கொள்கை குறித்து பதிவிட உள்ளேன்: கோவையில் ஜி.வி.பிரகாஷ் பேச்சு! VIDEO

கோவை: கோவை வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் மும்மொழிக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்” என்று தெரிவித்தார்.

ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது:
“கிங்ஸ்டன் ஒரு திகில்-சாகச படம். இதுவரை கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. இப்படத்தை கடலுக்கு அடியில் எடுத்து உள்ளதால் பிரமாண்டமாக இருக்கும்.

பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் சினிமாவில் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒரு மீனவ கிராமத்தால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல முடியாது. அந்தக் கோணத்தில் உருவாக்கப்பட்ட கதையாக இந்த படம் இருக்கிறது.

ஹாலிவுட் திரைப்படங்களில் கடல் கொள்ளையர்கள் பற்றிப் பேசுவார்கள், ஆனால் கிங்ஸ்டன் தூத்துக்குடி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூறும் படம். இது நம்ம ஊரு கதையாக உருவாகியுள்ளது. இப்படம் ஒரு பாட்டியின் கதையாக இருக்கும்.

தூத்துக்குடியில் வசிப்பவர்களின் நிலை குறித்த உண்மைச் சம்பவங்களை இந்த படத்தில் காணலாம். இப்படத்திற்காக அனைவருமே மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம்.”

மும்மொழிக் கொள்கை குறித்து…

மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்,
“அரசியலாக இந்த இடத்தில் பேசவில்லை. கண்டிப்பாக இதற்கான பதிலை என் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவேன். இந்தக் கதை பார்ட் நான்கு வரை உள்ளது. இது ஒரு பெரிய கதை,” என்றார்

Recent News

Advertisment

Latest Articles