கோவையில் பிரபல கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! வீட்டில் இருந்து பணி புரியவும் வாய்ப்பு…

கோவை: கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Zero to Hero பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் நகரங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வழங்க திறமைசாலியான மற்றும் ஆர்வமுள்ள பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளோம்.

இயற்பியல், வேதியியல், கணிதம் பயிற்சியாளர்கள்

10, 11, 12ஆம் வகுப்பு (CBSE/IGCSE/NEET/JEE)

MSc / MPhil / PhD (தகுதியான MSc இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)

  • இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் சிறப்பு நிபுணத்துவம்
  • CBSE/IGCSE பாடத்திட்டத்தினை கற்பிக்கவும், NEET/JEE தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும், திறன்
  • சிறப்பான கற்பித்தல் மற்றும் வழிகாட்டும் திறன்கள்
  • மாணவர்களின் முடிவுகளை மேம்படுத்தும் மனப்பாங்கு
  • ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளுக்கு ஏற்ப பணியாற்றும் திறன்

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்

பயிற்சி மையங்கள் அல்லது மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பயிற்சி அளிக்க தயாராக உள்ளவர்களுக்கு முன்னுரிமை

உங்கள் திறமைகளை மாணவர்களுடன் பகிர்ந்து, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க வாய்ப்பு…

இவ்வாறு Zero to Hero பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவலாம்.

Recent News

Advertisment

Latest Articles