ஜம்முன்னு போகலாம் சத்தியமங்கலத்திற்கு… 4 வழி பசுமை சாலை திட்டம் ரெடி…!

கோவை: கோவை குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை நான்கு வழி பசுமை சாலை திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் தொழில் துறையினரையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது. தொழில் மற்றும் போக்குவரத்து வசதிக்காகவும், சரக்கு வாகனங்கள் எளிதாகச் சென்று வரவும் புறவழிச் சாலை திட்டங்கள் தேவைப்படுகின்றன.

அதன்படி, கோவை மாவட்டம் குரும்பபாளையம் சத்தியமங்கலத்தில் தொடங்கி கர்நாடக எல்லையான ஹாசனூர் வரை 4 வழி பசுமை சாலை அமைய உள்ளது.

இத்திட்டத்திற்கு, சுமார் 4,000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், அதில் 800 ஏக்கர் விவசாய நிலம் என்றும் தெரிகிறது.

திட்டத்திற்கான நிலங்களை எடுக்க நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் காலவதியானதை அடுத்து, மீண்டும் நோட்டீஸ் வழங்கி நிலங்களை கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நியமித்துள்ளது.

இந்த சாலை குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. அதன்பிறகு வனப்பகுதியில் இரு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.

இந்த அதிகாரிகள் விரைவில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த புறவழிச் சாலை திட்டத்தைக் கைவிட்டு, சக்தி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Recent News

Advertisment

Latest Articles