கோவையில் சிறுத்தை நடமாட்டம்; 5 ஆடுகளைக் கொன்றதால் மக்கள் அச்சம்! – VIDEO

கோவை: கோவையில் 5 ஆடுகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை தயாராகி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 4 ஆடுகளை சிறுத்தை கொன்றது. மேலும், ஒரு ஆட்டையும கவ்விச்சென்றது.

இச்சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தை உறுதி செய்துள்ளனர்.

மேலும், கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் ஓணாப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Recent News

Advertisment

Latest Articles