கோவையில் தொடங்கியாச்சு மாங்காய் விற்பனை: Photos

கோவை: கோவைக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டிக்கு இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இது வியாபாரிகள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கோவைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாங்காய் மற்றும் மாம்பழங்கள் வருகின்றன.

இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், துபாய், மஸ்கட், சவுதி போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறன.

கோவையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான், இந்தியா முழுவதும் உள்ள மாங்காய் வியாபாரிகள், விற்பனை செய்து வருவதாகக் கோவை மாங்காய் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜவகர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்று கூறிய ஜவகர், கோவை மார்க்கெட்டில் தினமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மாங்காய் விற்பனையாவதாகத் தெரிவித்தார்.

Recent News

Advertisment

Latest Articles