13 அதிகாரிகள் மாற்றம்: கோவை வருகிறார் புதிய போலீஸ் துணை கமிஷனர்: Coimbatore Police

கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையராக உதயகுமாரை நியமித்து தமிழக அரசின் முதன்மை கூடுதல் செயலர் உத்தரவு.

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, காலியாக இருந்த கோவை தெற்கு துணை ஆணையர் பணியிடத்திற்கு உதயகுமார் நியமிக்கபட்டுள்ளர். இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் ரேங்கில் பதவி உயர்வு பெற்ற இவர், கோவைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஒரு சில தினங்களில் இவர் பதவியேற்பார் என்று தெரிகிறது.

மற்ற அதிகாரிகள்

ஆவடி துணை ஆணையராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நலன் துணை ஆணையராக (சென்னை) பால கிருஷ்ணன் நியமனம்.

ஆவடி சிறப்புக் காவல்படை காவல் கண்காணிப்பாளராக பிருந்தா, போச்சம்பள்ளி போலீஸ் பட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக அசோக்குமார், சென்னை பட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக அய்யாசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் தெற்கு துணை ஆணையராக தீபா சத்யா, ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் சங்கு உட்பட 13 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Recent News

Advertisment

Latest Articles