கோவை: தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியுள்ள நிலையில், முதல் தேர்வை எழுத 11,430 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடங்கியுள்ளது. வரும் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் நிலையில், மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுத இருந்தனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 35,999 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
கோவையில் மட்டும் 128 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், 363 பள்ளிகளைச் சேர்ந்த 16,650 மாணவர்கள், 19,319 மாணவிகள் என மொத்தம் 35,999 மாணவர்கள் தேர்வு எழுத இருந்தனர்.
ஆப்சென்ட்
தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், மாநிலம் முழுவதும் 11,430 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
கோவை மாவட்டத்தில் தேர்வு எழுத வராதவர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.