கோவை ஈஷா மஹாசிவராத்திரி; மோடி வாழ்த்து!

கோவை: கோவை ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி அன்று ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் பிப்ரவரி 26ம் தேதி ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கோவையில் ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைவருக்கும், சிவ பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகக்கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி, ஆழ்ந்த மரியாதையையும், பக்தியையும் ஊட்டுகிறது.

விரதம், தியானம் மற்றும் சுயபரிசோதனைக்கான ஒரு சந்தர்ப்பமாக அமையும் இவ்விழா, அறியாமையின் மீது அறிவின் வெற்றியைப் பாய்ச்சுகிறது.

மஹாசிவராத்திரியில் பக்தி, பிரார்த்தனைகள் மற்றும் சுய கட்டுப்பாடு மூலம், பக்தர்கள் ஆன்மீக ரீதியாக முன்னேற முடியும். அதே போல் உயர்ந்த தெய்வீக சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

மகாசிவராத்திரி போன்ற பண்டிகைகள் புவியியல், கலாச்சாரம், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தடைகளைத் தாண்டி, மனிதகுலத்தை மன அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இணைக்கின்றன.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது..

பகவான் சிவனின் தெய்வீக பாதங்களில் மனிதகுலத்தின் மீது அவரது ஆசீர்வாதங்களைப் பொழிவதற்காக பிரார்த்தனைகளுடன், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜி தலைமையில் நடைபெறும் 2025 ஈஷா மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மகத்தான வெற்றியாக அமையட்டும்.

இவ்வாறு பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News

Advertisment

Latest Articles