ஜனவரி-பிப்ரவரி: கோவையில் பதிவான மழை எவ்வளவு தெரியுமா?

கோவை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை கோவை பதிவான மழை அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யனப் பெய்தது. தமிழகம் மற்றும் புதுவையில் இந்தாண்டு மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

தாமதமாக முடிந்த வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதத்திலும் மழையைக் கொடுத்தது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை மட்டும் 24.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக இந்த காலகட்டத்தில் 22 மில்லி மீட்டர் மழையே பதிவாகும் நிலையில், இந்தாண்டு கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

கோவையில் கூடுதல் மழை

கோவையில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 5.4 மில்லி மீட்டர் பதிவாகும். ஆனால், இந்தாண்டு 14.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதாவது கூடுதலாக 8.7 மில்லி மீட்டர் மழை கோவையில் பதிவாகியுள்ளது. இது இயல்பிலிருந்து 60% அதிகம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை அதிக மழை பெய்ய மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் உள்ளது. இங்கு 230 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு இதோ…

Recent News

Advertisment

Latest Articles