ரமலான் நோன்பு தொடங்குகிறது!

கோவை: ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகை ரமலான். இப்பண்டிகைக்காக நோன்பு கடைபிடிக்கும் மக்கள், தினமும் காலை சூரியன் உதித்தது முதல், அஸ்தமிக்கும் வரை உணவு உண்ணாமல் விரதம் இருப்பர்.

தொடர்ந்து, மாலை நேரத்தில் இப்தார் விருந்துடன் நோன்பை முடிப்பார்கள். அதன்படி, ரமாலான் மாத நோன்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மது அயூப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 – 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்”

என்று அறிவித்துள்ளார்.

Recent News

Advertisment

Latest Articles