கோவை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Tamil Nadu weather
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 24ம் தேதி வரை, இயல்பு நிலையில் இருந்து வெப்பம் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.