கோவை: கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோவையில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 32 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பம், இந்த வாரம் 36 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கிறது.
வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நிழற்பந்தல்

சுந்தராபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இந்த நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரில் பல்வேறு பகுதிகளிலிருந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு யூ-டர்ன்கள் அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது சிக்னல்கள் செயல்பாட்டில் உள்ளன.
அங்கு மட்டும் நிழல் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
