கோவை: கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில் ஊட்டி மலை ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
இந்த விடுமுறையில் பொதுமக்கள் பலரும், குளுகுளு வென்ற சீதோஷன நிலையை அனுபவிக்க மலைப் பிரதேசங்களுக்கு தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம்.
ஊட்டி மலை ரயிலில் பயணிக்க அனைத்து சீசன்களிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் அதில் டிக்கெட் கிடைப்பதற்கு போட்டோபோட்டி நடக்கும். கோடை விடுமுறையின் போது சொல்லவா வேண்டும்.
தென்னிந்தியாவில் ஓடும் ஒரே ஒரு மலை ரயில் ஊட்டி மலை ரயில் மட்டுமே. அது மட்டுமல்லாது மிகவும் பழமை வாய்ந்த ரயிலும் கூட. இந்த ரயில் கடந்து செல்லும் ரயில் நிலையங்களும் வின்டேஜ் லுக்கில் வர்ணனையாக இருக்கும்.
சிறப்பு ரயில்

இந்த வருடம் ஊட்டியின் பியூட்டியை சுற்றிப்பார்க்க வரும் ரயில்வே பயணிகளுக்காக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை வருகிற மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஜூலை 6 தேதி வரை இயக்கப்பட உள்ளது.
மேற்கூறிய காலகட்டத்தில், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. எனவே கோடைக்கு ரம்மியமான ஒரு டூர் அடிக்க இந்த ரயில் டிக்கெட்டை இப்போதே புக் செய்யுங்கள் மக்களே.