தமிழக பட்ஜெட் (Tamil Nadu budget 2025) வரும் மார்ச் மாதம் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை, தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி காலை 9:30 மணிக்கு கூட்டியுள்ளேன்.
அன்றைய தினம் தமிழ்நாடு நிதி அமைச்சர், 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். பேரவை விதி 193/1ன் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.
மேலும், பேரவை விதி 189/1 கீழ் கூடுதல் மானியக் கோரிக்கைகள் மார்ச் மாதம் 21ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி நடைபெறுகிறது. எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.