கோவை: உக்கடத்தில் குறுகிய வளைவில் சிக்கிக்கொண்ட டாரஸ் லாரி பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டது.
கோவை உக்கடம் பைபாசில் இருந்து, புல்லுக்காடு செல்லும் வழியில் வீடு கட்டும் கம்பிகளை ஏற்றி டாரஸ் லாரி ஒன்று வந்தது.
இந்த லாரி பைபாசில் இருந்து, புல்லுக்காடு செல்லும் குறுகிய வளைவில் திரும்பியபோது, அந்த வளைவில் சிக்கி நின்றது.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த லாரி மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.