கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காமெடியன், டான்ஸர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற தனது தனித் திறமைகள் மூலமாக சின்னதிரையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர் சிவகார்த்திகேயன்.
கடந்த 2012ல் மெரினா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீராவாக அறிமுகமான இவர், பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எதிர்நீச்சல் (2013), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013), மான் கராத்தே (2014), ரெமோ (2016), டாக்டர் (2021) போன்ற படங்கள் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றன.
தற்போது வெள்ளித் திரையில் ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என்று இன்னும் தனது பல திறமைகளை நமக்குக் காட்டி, “யார்ரா இந்த பையன்” என்று கேட்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
தனது எதார்த்தமான நடிப்பு, நகைச்சுவை மூலம் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளார் , சிவகார்த்திகேயனின். விஜய், அஜித் அடுத்தது எஸ்.கே என்று சொல்லும் அளவுக்கு திரைத்துறையில் உயர்ந்துள்ளார் இவர்.
எஸ்.கே குடும்பம்
கடந்த 2010 ஆம் ஆண்டு , அத்தை மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன். இந்த தம்பதிக்கு ஆராதனா, குகன், பவன் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.கே தனது மகன் குகனுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த கியூட்டஸ்ட் வீடியோ உங்களுக்காக…
அமரன்
இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் கடந்த ஆண்டு ரிலீசானது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கினார்.
கமல்ஹாசனின், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் சேர்ந்து இப்படத்தை தயாரித்தன.
மேஜர் முகுந்த் வரதராஜன் தாய் நாட்டிற்காக செய்த தியாகத்தையும், அவரின் காதல் வாழ்கையும் எடுத்துரைத்தது காண்போரை கசியவைத்தது இந்த படம்.
மேஜர் முகுந்த் மற்றும் அவரது மனைவி ரெபெக்கா வர்கீஸ் ஆக, சிவகார்த்திகேயனும், நடிகை சாய்பல்லவியும் வாழ்த்திருப்பார்கள் என்று கூட சொன்னால் அது மிகையாகாது.
ஜி.வி. பிரகாஷின் பின்னணி மற்றும் பாடல்கள் இசையில் நாம் மெய்மறக்க வைத்தது என்பது நிதர்சனமான உண்மை.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டப்பட்ட இந்த படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.21 கோடி வசூலித்தது. அதுமட்டுமின்றி வெளியான 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி மற்றும் உலகளவில் ரூ.200 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் படங்களில் இடம்பிடித்தது.
அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடலை மெருகேற்றியிருந்தார். கட்டுமஸ்தான உடலைக் கொண்டு வர, கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டார்.
இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பலரும் இதனை ஷேர் செய்து, எஸ்.கே-வின் உழைப்பைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இனி வரும் காலங்களில், ஆக்சன் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் சிவகார்த்திகேயன் தான் செட் ஆவார் என்று கூறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.