- Sathiyapriya
தனது வாழ்நாள் லட்சியம், கனவு குறித்து மனம் திறந்துள்ளார் இயக்குனர் பிரேம்குமார்.
96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து இந்திய சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் பிரேம்குமார். கடந்த 2018-ம் ஆண்டு விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான “96” அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படமும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மலையாள ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் பிரேம்குமார்.
மலையாள சினிமாவின் ஜாம்பவான்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரேம்குமார் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார்.
லட்சியம்
இது தொடர்பாக அவர் கூறுகையில்,

“மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மோகன்லால் ஆகியோரது படங்களைப் பார்த்துத் தான் வளர்ந்தேன். இவர்களுடன் இணைந்து படம் இயக்க வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாள் லட்சியம், கனவு.
அதுமட்டுமின்றி தற்போதுள்ள நடிகர்களான பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரையும் எனக்குப் பிடிக்கும், விரைவில் அவர்களுடனும் இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.
பிரேம்குமாருக்கு ஆர்ட் சினிமா ஏற்கனவே கைவந்த கலை. எதார்த்த சினிமாவுக்கு பெயர்போன மலையாள சினிமாவில், தனது திறனை பிரேம்குமார் சரியாகக் காட்டினால், அவருக்கு கேரள சினிமா துறையில் சிறப்புக்கம்பள வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.