கோவையில் இந்த வார வானிலை; கொளுத்தும் வெப்பம்… 2 நாள் மழை!

கோவை: கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.

கோவையில் வரும் 14ம் தேதி வரை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி கோவையில் இன்றும் நாளையும், குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை குறைந்தது 22/23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recent News

Advertisment

Latest Articles