கோவை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தைப்பூசம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அரக்கனை வென்ற முருகனைக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழா தமிழகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளிலும், நாடு முழுவதிலும் உள்ள முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடத்தப்பட்டு தைப்பூசத் திருவிழா Thaipusam 2025 கொண்டாடப்படு வருகிறது.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் வந்துள்ள இந்த தைப்பூசத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என போட்டிபோட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக ஒவ்வொரு பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்துவிடும் த.வெ.க தலைவர் விஜய் Vijay wishes தைப்பூசத் திருவிழாவுக்குக் கவிதை வடிவில் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது X தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பின்வருமாறு:
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.