உலக தூக்க தினம்: உலக தூக்க தினம் மார்ச் 15ம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இந்தியர்கள் 59% பேர் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர் என்ற ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டுரையின் முடிவில் கோவை மக்கள் எவ்வளவு நேரம் தூங்குகின்றனர் என்ற ஆய்வுக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் தூக்க நேரத்தை பதிவிடலாம். தூக்க தினத்தன்று ஆய்வுக்கட்டுரை வெளியிடப்படும்.
மனிதர்கள் தூங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 15ம் தேதி தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனிடையே இந்தியர்கள் இடையே தூங்கும் வழக்கம் குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளவை:
போதிய தூக்கம் இல்லாமல் போனால், பள்ளி அல்லது வேலையில் செயல்திறன் பாதிக்கப்படும். மேலும் வாகன ஓட்டும் போதும், இயந்திரங்களை இயக்கும்போதும் விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
தூக்கம் மாறுபடும்

தூக்கச் சுழற்சிகள் பல்வேறு காரணிகளால் மாறுபடும். வயது, சமீபத்திய தூக்க பழக்கங்கள், இரவு உணவு நேரம், படுக்கைக்கு முன் திரை பார்ப்பது, மது பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளால் இது மாறுபடுகின்றது.
ஆரோக்கியமான தூக்கத்திற்கு, ஒருவர் பல்வேறு தூக்க நிலை சுழற்சியைக் கடந்து செல்ல வேண்டும்.
தூக்க நிலைகள் நான்கு வகைப்படி பிரிக்கப்பட்டுள்ளன. இதில் Rapid Eye Movement – REM). மற்ற வகைகள் non-REM (NREM). அடிக்கடி இடையூறுகள் மற்றும் விழிப்பு தூக்க சுழற்சியை பாதிக்கின்றன.
இதனால் மூளைக்கான செயல்பாடுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றில் தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் முதியவர்கள் பலர் பல்வேறு காரணங்களால் முழுமையான, இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உலக தூக்க நாளை முன்னிட்டு, 2025ல், LocalCircles புதிதாக நடத்திய ஆய்வில், மக்கள் தூக்கப் பழக்கங்கள் மற்றும் அவற்றின் காரணமாக ஏற்படும் தூக்கக் குறைபாடுகள் மற்றும் பிற உடல் ஆரோக்கிய பிரச்சினைகளைப் பற்றி கண்டறியப்பட்டது.
இந்த ஆய்விற்கு இந்தியாவின் 348 மாவட்டங்களில் இருந்து 43,000க்கும் மேற்பட்ட பதில்கள் கிடைத்துள்ளன.
குறைவான தூக்கம்

இதில் 61% பதிலளித்தவர்கள் ஆண்கள், 39% பதிலளித்தவர்கள் பெண்கள். 45% பதிலளித்தவர்கள் பெருநகரங்களில், 28% இரண்டா நிலை (Tier 2 cities) நகரங்களிலும், 27% பதிலளித்தவர்கள் மூன்று, நான்கு, ஐந்தாம் நிலை நகரங்களிலும் உள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் 59% மக்கள் தினசரி 6 மணிநேரத்திற்குக் குறைவான தூக்கத்தை பெருகின்றனர். இந்த 59% மக்கள் மட்டுமே இடையூறு இல்லாமல் 6 மணி நேரம் தூங்குவதாக தெரிவித்துள்ளனர்.
72% மக்கள், கழிவறையை பயன்படுத்துவதற்கும், வெளிப்புற சத்தம், கொசுக்கடி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ச்சியான தூக்கத்தை பெற முடியவில்லை என்கின்றனர்.
கடந்த ஓராண்டில் தினமும் இரவு எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்பதற்கு 15,659 பேர் பதில் கொடுத்துள்ளனர்.
- 10 மணி நேரத்திற்கு மேல் என்பது மிக சொற்ப அளவே.
- 8ல் இருந்து 10 மணி நேரம்: 2%
- 6ல் இருந்து 8 மணி நேரம்: 39%
- 4ல் இருந்து 6 மணி நேரம்: 39%
- 4 மணி நேரம் வரை: 20%
இவ்வாறு லோக்கல் சர்க்கில் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.